யாருக்கும் பெரும்பான்மை இல்லை! மீண்டும் இழுபறியில் ஹரியானா!
கடந்த 21ஆம் தேதி ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதன் ரிசல்ட் தற்போது வந்துகொண்டிருக்கிறது.இதில் மஹாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதானால் அங்கு பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றியை உறுதி செய்து வருகிறது.
ஆனால் ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அம்மாநிலத்தில் ஆட்சியமைக்க 49 தொகுதிகள் பெரும்பான்மை பெற வேண்டிய சூழலில்,
பாஜக 35 தொகுதிகளிலும் காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. ஜனாயக் ஜனதா தளம் 9 தொகுதிகளிலும், சுயேச்சை 8 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருவதால், கூட்டணிக்காக இரு பிரதான கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.