10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட் – அமைச்சர் அறிவிப்பு…!
வருகின்ற கல்வியாண்டில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 5 லட்சம் டேப்லெட்டுகள் வாங்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது. இந்த டேப்லெட்டுகள் வாங்க மொத்தம் ரூ.620 கோடி செலவிடப்படும் என்றும் இதற்கான டெண்டர்கள் ஏற்கனவே அரசால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஹரியானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மே மாதத்திற்குள் மாணவர்களுக்கு டேப்லெட்டுகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களை வாங்க முடியாதவர்களுக்கு டிஜிட்டல் கல்வியில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் உள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் டேப்லெட்டில் டிஜிட்டல் மெட்டீரியல், இ-புத்தகங்கள், பல்வேறு வகையான தேர்வு வீடியோக்கள் மற்றும் அரசு பள்ளிகளில் வகுப்பு வாரியான பாடத்திட்டம் தொடர்பான இருக்கும் என்றும் இந்த திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் கன்வர்பால் கூறியுள்ளார்.