மீண்டும் ஹரியானா முதல்வராகிறார் மனோகர் லால் கட்டார்! நாளை பதவியேற்பு!
ஹரியானாவில் நடந்தது முடிந்த சட்ட மன்ற தேர்தலில் 90 இடங்களில் 40 இடங்களில் பாரதிய ஜனதாவும், 31 இடங்களில் காங்கிரசும், 10 இடங்களில் ஜனாயக் ஜனதா தளமும் கைப்பற்றி இருந்தது.
ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை என்பதால் பாரதிய ஜனதா கட்சியானது ஜனாயக் ஜனதா தளத்தின் கூட்டணி பலத்தோடு ஆட்சியமைக்க உள்ளது. இதனை அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் நாளை 2வது முறையாக பிற்பகல் 2.15 மணிக்கு ஹரியானா முதல்வராக பதவி ஏற்க உள்ளதாகவும், துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்க உள்ளதாகவும், அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.