ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா!
Manohar Lal Khattar : ஹரியானா அரசியலில் திடீர் திருப்பமாக அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுக்கு அடுத்தடுத்து பெரிய அடி விழுந்து வருகிறது. அதாவது, முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் உள்ளிட்ட மூன்று எம்பிக்கள் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், இதில் ராஜஸ்தான் பாஜக எம்பி ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
Read More – தமிழக போலீஸ் கும்பகர்ணன் போல தூங்குகிறார்கள்… இபிஎஸ் கடும் குற்றசாட்டு.!
அடுத்தடுத்து எம்பிக்கள் பாஜகவில் இருந்து விலகி வருவதால் தொண்டர்கள் மத்தியிலும், நிர்வாகிகள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஹரியானாவில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜேஜேஜே கட்சி வாபஸ் பெற்றதால், அம்மாநில பாஜக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதாவது, ஹரியானாவில் பாஜக, ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்துள்ளது. அதன்படி, முதலமைச்சர் மட்டுமின்றி பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர்.
Read More – பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி.? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!
கூட்டணி ஆட்சியில் ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா ஹரியானா துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கு முன் ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி கவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மக்களவை தேர்தல் தொகுதி பங்கீட்டு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் ஹரியானாவில் பாஜக – ஜேஜேஎம் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Read More – திமுக கூட்டணி : நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டி.!
இருப்பினும், ஆட்சிக் கவிழும் அபாயம் இருந்தாலும் கூட்டணியில் இருந்த ஜேஜேஎம் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களை தன் வசப்படுத்தி பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது. அதாவது, பாஜக – ஜேஜேஎம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தாலும் புதிய கூட்டணியுடன் மீண்டும் ஹரியானாவில் ஆட்சி அமைகிறது பாஜக. அதன்படி, ஹரியானா புதிய முதல்வர் பதவிக்கு நயாஸ் சைனி பெயரும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.