லண்டன் கல்லூரி தேர்தலில் இந்து மாணவருக்கு தடை.? கடிதம் எழுதிய ஹரியானா முதல்வர்.!
லண்டன் கல்லூரி தேர்தலில் இந்து மாணவருக்கு தடை என்பதால் ஹரியானா முதல்வர் கல்லூரி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஹரியானாவை சேர்ந்த கரண் கட்டாரியா எனும் மாணவர் லண்டனில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் அந்த லண்டன் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட தனது ஆதரவாளர்களுடன் நிர்வாகத்தை அணுகியுள்ளார். அனால், அவர்மீது சில குற்றசாட்டுகள் முன் வைத்து, கடந்த வாரம் கரண் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
முதல்வர் கடிதம் :
இந்த சம்பவம் குறித்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் லண்டன் பல்கலைக்கழக்த்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ இந்தியாரான இந்து மாணவர் ஒருவர் லண்டன் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் நின்று மாணவர்களை வழிநடத்துவதை கண்டு சில தனிநபர்கள் சகித்துக்கொள்ள முடியாமல் இருந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என்றும், மேலும், இனம் மற்றும் நம்பிக்கைகள் காரணமாக பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
பல்கலைக்கழகம் விளக்கம் :
முதல்வரின் கடிதம் குறித்து பதில் அனுப்பிய கல்லூரி நிர்வாகம், தேர்தல் விதிகளை மாணவர் மீறியதற்காக, மாணவர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்கு கரண் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்றும், தேர்தல் நடைமுறைகள் பற்றி வெளிப்படைத் தன்மையுடன் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.