சீனா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்த ஹரியானா .!
கடந்த திங்கள்கிழமை கல்வான் பள்ளத்தாக்கில் லடாக்கில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான நடைபெற்ற சீனா தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்நிலையில், ஹரியானா அரசு சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது. ஹரியானாவில் யமுனநகர் மற்றும் ஹிசாரில் உள்ள 2 அனல் மின் நிலையத்தில் மாசு கட்டுப்பாட்டு கருவி வைக்க இரண்டு வெவ்வேறு சீன நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியது.
தற்போது, சீனா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஹிசார் மற்றும் யமுனநகரில் உள்ள அனல் மின் நிலையங்களில் புதிய சுற்றுச்சூழல் விதிமுறைகளை வெளியிட்டது. அதில், மாசு கட்டுப்பாட்டு கருவிகளை நிறுவவேண்டும் என கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.