கடன் கேட்டு விண்ணப்பித்த டீக்கடைக்காரருக்கு 50கோடி கடன் பாக்கி என கூறிய அரியானா வங்கி.!
அரியானா வங்கியில் ரூ. 50 ஆயிரம் கடன் கேட்டு விண்ணப்பித்தவருக்கு ஏற்கனவே ரூ. 50கோடி கடனை பாக்கி வைத்துள்ளதாக டீக்கடை காரருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.
அரியானா மாநிலத்தில் உள்ள குருக்சேஷ்த்ராவை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கடையை மூட வேண்டிய சூழ்நிலை ராஜ்குமாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் டீக்கடையை திறப்பதற்காக வங்கியில் ரூ. 50 ஆயிரம் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
அதனையடுத்து அரியானா வங்கி கடனுக்கான ஆவணங்களை சரிபார்த்த பின்னர், நீங்கள் ஏற்கனவே ரூ. 50 கோடி கடனை பாக்கி வைத்துள்ளீர்கள். ஏற்கனவே கடன் வாங்கி விட்டு, இப்போது மீண்டும் கடன் கேட்கிறீர்கள், முதலில் இருக்கிற கடன் பாக்கிய கட்டுங்கள் என்று வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. இது ராஜ்குமாருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண டீக்கடை வைத்து வாழ்க்கையை ஓட்டி வரும் நான் எப்படி 50கோடி கடன் வாங்குவேன், இதுவரை நான் எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.