விறுவிறுப்பாக நடைபெறும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் … தற்போதய நிலவரம் என்ன?
ஹரியானாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் 3 மணி நிலவரப்படி 49.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், தற்போது 3 மணி நிலவரப்படி 49.13 % சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைவரும், ஹரியானாவின் தற்போதைய முதல்வருமான நயாப் சிங் சைனி, ஹரியானா முன்னாள் முதலைமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா, பாஜக முன்னாள் தலைவர் சாவித்ரி ஜிண்டால் என முக்கிய அரசியல் புள்ளிகள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.
அவர்களைத் தொடர்ந்து, மல்யுத்த வீராங்கனையும் தற்போதைய காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத், மல்யுத்த வீரரும் பாஜக தலைவருமான யோகேஷ்வர் தத் மல்யுத்த வீரரும் காங்கிரஸ் தலைவருமான பஜ்ரங் புனியா அவரது மனைவி சங்கீத போகத் என மக்களால் கவனிக்கபடும் புள்ளிகளும் அவர்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
கடந்த 2 தேர்தல்களிலும், அதாவது கடந்த 10 ஆண்டுகள் பாஜக தொடர்ந்து ஆட்சியை கைபற்றியுள்ளது. 2 முறையும் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இந்த முறை ஆட்சியை கைப்பற்றுமா என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
மேலும், விறுவிறுவென நடைபெற்று வரும் இந்த தேர்தல் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைய உள்ளது. தற்போது நடைபெற்று இந்த ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் அக்டோபர் 8 ம்-தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.