உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பொறுப்பேற்றுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் குழுவில் 34 உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிர்வாக குழுவிற்கு தலைவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோகி என்பவரின் பதிவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய நிர்வாக குழு தலைவராக இந்தியாவை சேர்ந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான ஒப்பந்தத்தில் 194 நாடுகள் கையெழுத்திட்டு ஹர்ஷவர்தனை தேர்வு செய்தனர். மேலும், இந்த நிர்வாக வாரியத்தலைவர் தேர்வு வருடத்திற்கு ஒருமுறை பிராந்திய குழுக்களிடையே சுழற்சி முறையில் நடைபெறும்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பொறுப்பேற்றுள்ளார். இவரின் பதவிக்காலம் அடுத்த 3 ஆண்டுகள் வரை தொடரும். WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவர் தேர்தல் குறித்து கடந்த வருடம் மே மாதம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற முடிவின் பெயரில் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…