ஹரியானவில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு.
கடந்த சில மாதங்களாக ஹரியானவில் கொரோனா பெருந்தொற்றானது நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வந்தது, உயிர்பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே இருந்தது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக ஹரியானவில் பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து ஹரியான பள்ளிக் கல்வித்துறை இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஹரியானாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படாது என்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் முன்னதாக, கல்வி இயக்குநரகம் மாணவர்கள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றிய பள்ளி வாரியான தரவுகளை அனுப்ப மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு உத்தரவுகளை அனுப்பியுள்ளது. ஹரியானா மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் மே 23-ஆம் தேதி அன்று 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 2021 ஜூன் 15 முதல் நடத்த வாய்ப்புள்ளது என்று அறிவித்தார்.
ஆனால் ஹரியானா பள்ளி மீண்டும் திறக்கப்படுவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார். தற்போது மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 2000-க்கும் மேற்பட்ட கொரோனா புதிய பாதிப்பு பதிவாகியுள்ளது என்றும், தொற்று குறைந்திருந்தாலும் இயல்பு நிலை திரும்பும் வரை பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை ஜூன் 15 வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது என கல்வி அமைச்சர் கன்வர் பால் குர்ஜார் இன்று தெரிவித்தார்.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…