மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி
மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலங்களவைத் துணை தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஏற்கனவே துணை தலைவர் பதவியில் இருந்து வந்த, ஹரிவன்ஸ் நாராயண் சிங்கே மீண்டும் களமிறக்கப்பட்டார் .
எனவே இதற்கு முன்னதாகவே அனைத்து பாஜக எம்.பி.க்களும் கட்டாயம் சபையில் ஆஜராக வேண்டுமென கொறடா உத்தரவு பிறப்பித்தார். மாநிலங்களவை துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளாக போட்டியிட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.பி மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஹரிவன்ஸ் வெற்றிபெற்றதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.குரல்