ஹர்திக் படேல் கன்னத்தில் அறைந்த மர்ம நபர் வைரலாகும் வீடியோ
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ஹர்திக் படேல் கலந்து கொண்டார். ஹர்திக்படேல் மேடையில் பேசிக் கொண்டு இருந்த போது மேடையில் ஏறிய மர்ம நபர் திடீரென ஹர்திக் படேல் கன்னத்தில் அறைந்தார்.
மேடைக்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் அந்த மர்ம நபரை அடித்து போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஹர்திக் படேல் ஹெலிகாப்டரில் சென்றார். ஆனால், விவசாயி ஒருவர் தன் நிலத்தில், அந்த ஹெலிகாப்டர் இறங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஹர்திக் படேல் சாலை வழியாக பொதுக்கூட்டத்திற்கு சென்றார். இந்நிலையில் இன்று இந்த நிகழ்வு நடந்துள்ளது.ஹர்திக் படேல் இடஓதுக்கீடு கேட்டு குஜராத்தில் பல போராட்டங்களை நடத்தினார்.
கடந்த மாதம் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.