அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கு தானும் அவரது குடும்பத்தினரும் ரூ .21,000 நன்கொடை அளித்த ஹார்டிக் படேல்.
நேற்று அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின் 28 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார்.
அங்கு அவர் கூறுகையில் பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு முடிந்துவிட்டது, இந்தியாவை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கு தானும் அவரது குடும்பத்தினரும் ரூ .21,000 நன்கொடை அளிப்பதாக குஜராத் காங்கிரஸ் தலைவர் ஹார்டிக் படேல் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இந்நிலையில் இந்த தொகை ஆகஸ்ட்- 5 ஆம் தேதி அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் மேலும் தெரிவித்தார்.