ஹர்தாஸ்:பலத்த பாதுகாப்போடு இன்று குடுப்பத்தினர் கோர்ட்டில் ஆஜர்!
உத்தரப்பிரதேச மாநில ஹத்ராஸில் பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் இன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இளம் பெண்ணின் குடும்பத்தினர் அலகாபாத் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஹத்ராஸ் கிராமத்தில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்ற அவரது உடலை குடும்பத்தினர் அனுமதியின்றி காவல்துறையினரே இரவோடு இரவாக எரித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இவ்விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து அலகாபாத் உயர்நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வழக்கை நீதிபதிகள் ராஜன் ராய், ஜஸ்பிரீத்சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமர்வு முன் இன்றைய விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஹத்ராஸில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இளம்பெண்ணின் குடும்பத்தினர் லக்னோ அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று பிற்பகல் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.