மகிழ்ச்சி…6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை – அரசு அறிவிப்பு!

Default Image

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று,கொல்லம்,இடுக்கி,வயநாடு, பத்தனம்திட்டா,பாலக்காடு,திருவனந்தபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (ஜன.14) பொங்கல் விடுமுறை அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 ஆம் தேதியில் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரி,கேரள முதலமைச்சருக்கு,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில்,தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பண்டிகைக்கு உள்ளூர் அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான,உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.

கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன்.ஜனவரி 14 ஆம் தேதி,புனிதமான தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்.ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15 ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே,தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைக்கான உள்ளூர் தினமாக ஜனவரி 14 ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார் .

இந்நிலையில்,தமிழக முதல்வரின் இந்த கோரிக்கையை ஏற்று,கொல்லம், இடுக்கி,வயநாடு,பத்தனம்திட்டா,பாலக்காடு,திருவனந்தபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (ஜன.14) பொங்கல் விடுமுறை  அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்