அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – பிரதமர் நரேந்திர மோடி
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
சூப்பர் ஷ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் தனக்கென தனி இடம் பதித்து, தற்போது அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில், இன்று இவர் தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை அவரது ரசிகர் பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும், ரஜினிகாந்திற்கு ட்வீட்டரில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவார்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.