மகிழ்ச்சி…இந்தியாவில் மீண்டும் 30 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,041 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 276 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,36,78,786 ஆக உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 26,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 2000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,36,78,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 276 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,47,194 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 29,621 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,29,31,972 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,99,620 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாடு முழுவதும் இதுவரை 86,01,59,011 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 38,18,362 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.