டெல்லியில் சாந்தினி சவுக் பகுதி தற்போது அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன் கோயில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.
டெல்லியில் சாந்தினி சவுக் பகுதி தற்போது அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கிருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன் கோயில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இந்த விவகாரத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோயில் இடிக்கப்பட்ட விவகாரத்தை எதிர்த்து விஎச்பி மற்றும் பஜ்ரங் தள தொழிலாளர்கள் கொடிகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். கவுரிசங்கர் மந்திரிலிருந்து கோயில் இருந்த இடத்திற்கு போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர்.
இதனையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து, விஎச்பி செய்தித்தொடர்பாளர் மகேந்திரா அவர் கூறுகையில், டெல்லி பிரிவு தலைவர் கபில் கன்னா, துணைத் தலைவர் சுரேந்திர குப்தா, செயலாளர் ரவி மற்றும் பஜ்ரங் தளம் மாநில கன்வீனர் பரார் பாத்ரா உட்பட சுமார் 15-20 தொழிலாளர்கள் மற்றும் தலைவர்கள் போராட்டத்தின்போது போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், கோயில் அருகே கூடியிருந்த 27 எதிர்ப்பாளர்கள் கொரோனா வழிகாட்டுதலால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். அவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டன.ர் இந்த எதிர்ப்பாளர்கள் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 18வது சீசனில் இரு…
ஐதராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டெல்லி…
டெல்லி : ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோஅணி, ஐபிஎல் 2025 சீசனின் முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதலில்…
ஹைதராபாத் : நடிகர் விக்ரம் தற்போது வீர தீர சூரன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும்…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு, மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு…