சிபிஎஸ்இ தேர்வில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவி ஹன்சிகா முதலிடம்
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.நாடு முழுவதும் 31 லட்சம் மாணவர்கள் தேர்வுகள் எழுதினர். கடந்த ஏப்ரல் 4 -ம் தேதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் முடிந்தது.
இந்த தேர்வில் 83.4% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹன்சிகா சுக்லா , கரிஷ்மா அரோரா ஆகிய மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர்.
மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 79.4% , மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 88.70% ஆகும்.
முதலிடம் பிடித்த மாணவி ஹன்சிகா சுக்லா கூறுகையில் , சமூக வலைதளங்களை பயன்படுத்தவில்லை எனக் கூறினார்.மேலும் தனக்கு பொதுப்போக்கு என்றால் பாடல்கள் கேட்பது , விளையாட்டு போட்டிகளை பார்ப்பது என கூறினார்.