ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

Narendra Modi,BJP

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரங்களில் அவர் பிரதமர் மோடி குறித்து அவர் வைக்கும் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் பெரும் தாக்கத்தை இதை தேர்தலில் ஏற்படுத்தி வருகிறது. அதிலும் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா நாட்டில் யாரும் பயன்பெறவில்லை என்று சொல்ல முடியாது.

மோடி செய்த நன்மைகளுக்கு அவர்கள் என்றென்றும் நன்றிக் கடன் செலுத்த வேண்டும். அவர்கள் வேறு யாருமில்லை பரம ஏழைகளான அம்பானியும், அதானியும் தான். இதை போல அவரது பல ஏழை நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடியை மோடி தள்ளுபடி செய்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய விஷயம்?” என்று இப்படி மோடியை விமர்சித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இதற்க்கு பிரதமர் நரேந்திர மோடியோ ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்து வருகிறார்.

மேலும், எந்த தொழிலதிபர்களுக்கும் நான் ஆதரவாகவும் செயல்படவில்லை எனவும் ஏழைகளுக்காகவே வாழ்நாள் முழுவதும் உழைக்கிறேன் எனவும் மோடி தற்போது பேசி வருகிறார். இந்த நிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு இன்று பேட்டியளித்த மோடி அவர்கள் அந்த பேட்டியில் ராகுல் காந்தி கூறியதற்கு பதிலளித்து பேசி இருந்தார். அவர் கூறுகியில், “ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்திய பிரதமராக இருந்த காலத்தில், அவர் தொழிலதிபரான டாட்டா பிர்லாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் முன்வைத்தனர்.

இப்போது அந்த நேரு குடும்பம் என்னை அம்பானி, அதானிக்கு ஆதரவானவன் என்று சொல்கிறது. நம் நாட்டின் சுதந்திர தினத்தன்று விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சாதனையாளர்களை எப்படி கவுரவிக்காமல் இருக்க முடியும்? அப்படி செய்தது என் தவறா? மேலும், அம்பானி, அதானி மட்டுமல்ல வேறு யாருக்கும் நான் முறைகேடாக ஆதாயம் அளித்ததில்லை. அப்படி நான் யாருக்காவது ஆதாயம் அளித்ததாக நிரூபித்தால் நான் தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன்.

அதே போல இந்த நாட்டுக்கு வளம் சேர்க்கக்கூடிய தொழிலதிபர்களை நான் மிகவும் மதிக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பணமும், தொழிலாளர்களின் உழைப்பும் இங்கே தேவைப்படுகிறது. முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களை இந்தியாவியிலிருந்து புறக்கணிப்பது நாட்டிற்கு நல்லது கிடையாது”, என அந்த தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan
DMK - Revanth Reddy
udhayanidhi stalin annamalai