பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட “கொரோனில்” மருந்தின் விவரங்களை ஒப்படைக்க – மத்திய அரசு.!
கொரோனா வைரஸை குணப்படுத்த ஆயுர்வேத மருந்தின் கலவை குறித்த விவரங்களை பதஞ்சலி ஆயுர்வேத் விரைவில் விளக்கமளிக்க மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் உலகளவில் பரவத் தொடங்கியது. இந்நிலையில் இந்த கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகளில் அனைவரும் அதை கட்டுப்படுத்த மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக இறங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி இன்று ஹரித்வாரில் உள்ளபதஞ்சலி யோக பீத்தில் நேற்று மதியம் 12 மணிக்கு வெளியிடபட்டது. பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருந்து கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்திற்கு “Coronil” என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “கொரோனில் மற்றும் ஸ்வாசரி” இந்த மருந்துகள் நாடு முழுவதும் 280 நோயாளிகளுக்கு சோதனை செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன என்று பதஞ்சலியின் நிறுவனர் ராம்தேவ் தெரிவித்துள்ளார். இந்த மருந்து ரூ.545 விலையில் விற்கப்படுகிறது இது ஒரு வாரத்திற்குள் இந்தியா முழுவதும் விற்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில் பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளின் விவரங்களை வழங்குமாறு மத்திய அரசு தெறிவிக்கப்பட்டுள்ளது.அந்த உரிமைகளின் பார்க்கும் வரை விளம்பரம் செய்வதையோ அல்லது விளம்பரப்படுத்துவதையோ நிறுத்தவும் அந்நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மருந்துகளின் கலவை, அதன் ஆராய்ச்சியின் முடிவுகள், ஆராய்ச்சி நடத்தப்பட்ட மருத்துவமனைகள் நிறுவன நெறிமுறைக் குழுவிலிருந்து அனுமதி பெற்றதா இல்ல அது பதிவுசெய்ததா என்ற விவரங்களை விரைவாக கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.