BITSAT தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியானது..!
பிட்சாட் தேர்வு ஆகஸ்ட் 3 முதல் 9 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இன்று பிட்சாட் 2021 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை bitadmission.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
இந்த தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். இந்தத் தேர்வு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் நடத்தப்படும். இந்த தேர்வு ஆகஸ்ட் 3 முதல் 9 வரை நடத்தப்படும். நுழைவு கார்டைப் பதிவிறக்க, தேர்வர்கள் முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான bitadmission.com சென்று உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி பயன்படுத்தி “ஹால் டிக்கெட்” பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
நுழைவுகார்டில் தேதி, நேரம், இடம், பாடத்திட்டம், பெயர், பாலினம், பிறந்த தேதி, தேர்வின் விண்ணப்ப எண் உள்ளிட்ட முக்கியமான விவரங்கள் இருக்கும். அதை முழுமையாக சரிபார்க்கவும், ஏனென்றால் ஹால் டிக்கெட்டில் ஏதேனும் தவறு இருந்தால், நீங்கள் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.