நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!

Default Image

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களிலும்,இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்களிலும் அமைந்துள்ள வெவ்வேறு மையங்களில் வருகின்ற ஜூலை 17-ம் தேதி நீட் இளங்கலை(யுஜி) படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.குறிப்பாக,நீட் யுஜி தேர்வானது தமிழ்,உருது,ஆங்கிலம், இந்தி,மராத்தி,அஸ்ஸாமி,ஒடியா,குஜராத்தி,பெங்காலி,பஞ்சாபி,கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட 13 வெவ்வேறு மொழிகளில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்,நீட் யுஜி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், தற்போது நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. neet.nta.nic.in இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடபட்டுள்ளதையடுத்து, தேர்வு மைய விவரம், தேர்வின் போது பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள் ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்