45 ஆயிரம் கோடிக்கு போர் விமானங்கள் தயாரிக்க மோடி அரசு புதிய ஒப்பந்தம்!
இந்தியாவில் ராணுவத்திற்கு தேவையான போர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள், கனரக வாகனங்கள் என முக்கிய வாகனங்களை இதுவரை எச்.ஏ.எல் எனும் இந்திய நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.
தற்போது அதே எச்.ஏ.எல் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை மத்திய அரசு போட்டுள்ளது. அதன்படி 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 83 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்க மத்திய அரசால் எச்.ஏ.எல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசானது ரஃபேல் விமானத்தை மட்டும் எச்.ஏ.எல் நிறுவனத்திடம் கொடுக்காமல் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு தயாரிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை உண்டாக்கியது.