டெல்லி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முடி மற்றும் எலும்புகள் ஷ்ரத்தாவினுடையது! உறுதிசெய்த டிஎன்ஏ.!
டெல்லி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட, முடி மற்றும் எலும்புகள் ஷ்ரத்தாவுடையது! வெளியான டிஎன்ஏ தகவல்.
கடந்த நவம்பரில் நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில், தற்போது அடுத்தகட்ட தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட முடி மற்றும் எலும்பு மாதிரிகள், சோதனைக்கு பிறகு ஷ்ரத்தா வால்கருக்கு சொந்தமானது என்று டிஎன்ஏ தகவல் அறிக்கைகள் கூறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
டிஎன்ஏ சோதனைக்காக எலும்பு மற்றும் முடி மாதிரிகள் ஹைதராபாத்தில் உள்ள டிஎன்ஏ மைட்டோகாண்ட்ரியல் ப்ரோஃபைலிங்கிற்காக அனுப்பப்பட்டது, தற்போது அந்த டிஎன்ஏ தகவல் இதனை உறுதி செய்துள்ளதாக காவல்துறையின் சிறப்பு ஆணையர், (சட்டம் மற்றும் ஒழுங்கு) சாகர் ப்ரீத் ஹூடா தெரிவித்தார்.