ஹத்ராஸ் பாலியல் வழக்கு..நள்ளிரவிலேயே தகனம் செய்யப்பட்ட இளம்பெண் உடல்..!
உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ம் தேதி 19 வயது தலித் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு எலும்புகளை உடைத்து, நாக்கு வெட்டப்பட்ட நிலையில், அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், டெல்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இளம் பெண்ணின் மரணம் செய்தி அறிந்து அரசியல்வாதிகள், விளையாட்டு மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இறந்த பெண்ணின் உடலை உத்தரப்பிரதேச காவல்துறையினர் நள்ளிரவு அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். அந்த கிராமவாசிகள் பெண்ணின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகக் கூறினார். ஆனால், மாவட்ட நிர்வாகம் உடலை தகனம் செய்ய அழுத்தம் கொடுத்து, இளம்பெண் உடலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல விடாமல் காவல்துறையினரே அவசர அவசரமாக இறுதி சடங்கை செய்து தகனம் செய்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
ABSOLUTELY UNBELIEVABLE – Right behind me is the body of #HathrasCase victim burning. Police barricaded the family inside their home and burnt the body without letting anybody know. When we questioned the police, this is what they did. pic.twitter.com/0VgfQGjjfb
— Tanushree Pandey (@TanushreePande) September 29, 2020