ஹத்ராஸ் வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் எனும் கிராமத்தில் 19 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையாக கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி சந்திர பால் சிங் மற்றும் 100 பெண் வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர் சத்யா துபே ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவாக தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், கீர்த்தி சிங், ஸ்ரீகுமார் யாதவ் சஞ்சய் மல்கோத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடி உள்ளனர். இந்நிலையில் இந்த வலக்கை சி.பி.ஐ வழக்காக மாற்ற வேண்டும் என உத்திர பிரதேச அரசு கோரியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து இந்திரா ஜெய்சிங் அவர்கள் கூறும் பொழுது சிபிஐ விசாரணை மீது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நம்பிக்கை இல்லை எனவும், சிறப்பு புலனாய்வு குழுவை உச்ச நீதிமன்றத்தில் நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பெண்ணின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே அவர்கள், ஹட்ராஸ் வழக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், உயிர் இழந்த பெண்களின் குடும்பத்தினருக்காக வாதாடுவதற்கு வழக்கறிஞர்களை தேர்வு செய்து விட்டார்களா என்பதை கேட்டு அறிய வேண்டும் எனவும் குடும்பத்தினர் மற்றும் சாட்சிகளுக்கு அளிக்கப்படக் கூடிய பாதுகாப்பு குறித்த விவரங்களையும் உத்தரபிரதேச அரசு விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…