Hacker Attack: ஐசிஎம்ஆர் இணையதளத்தை ஒரு நாளில் 6,000 முறை தாக்கிய ஹேக்கர்கள்
AIIMSக்குப் பிறகு, சைபர் தாக்குதல் நடத்துபவர்கள் இப்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ICMR இன் இணையதளங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளனர்.
ஊடக அறிக்கையின்படி, நவம்பர் 30 அன்று, சைபர் ஹேக்கர்கள் ஐசிஎம்ஆர் இன் அதாவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணையதளத்தை 24 மணி நேரத்தில் 6000 முறை தாக்க முயன்றனர்.இந்த தாக்குதல்கள் ஹாங்காங் ஐபி முகவரியை கொண்டு நிகழ்த்தப்பட்டதாகவும்,இருப்பினும் இந்த சைபர் தாக்குதல் தடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்தவிதமான தாக்குதல்களில் இருந்து தப்பிக்க ஃபயர்வாலை புதுப்பிக்குமாறு NIC அரசாங்க நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.2020 முதல், சுகாதார அமைப்பின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.