H3N2 வைரஸ் இவர்களை தாக்க அதிக வாய்ப்பு – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்..!
எச்3என்2 வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
நாடு முழுவதும் எச்3என்2 வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. H3N2 வைரசுக்கு கிட்டத்தட்ட தொண்டை புண், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் போன்றவை அறிகுறிகள் என கூறப்படுகிறது.
இருவர் உயிரிழப்பு
இந்த நிலையில், காய்ச்சல், சளி அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது. இதற்கிடையில், கர்நாடக மற்றும் ஹரியானா மாநிலங்களில் எச்3என்2 (H3N2) வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
இந்த நிலையில், எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவலை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை தடுக்க மாநில அரசுகள் போதிய மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சில மாநிலங்களை கொரோனா தொற்று கணிசமாக திகரிப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
வைரஸ் காய்ச்சலால் கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், உடல் பருமன், நீரிழிவு நோய், கல்லீரல், கணைய பாதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்களும் அதிகம் பாதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.