கொரோனா போல பரவும் H3N2 வைரஸ் தொற்று…! தடுப்பதற்கான வழிமுறைகளை கூறுகிறார் டாக்டர் ரந்தீப் குலேரியா…!

Default Image

H3N2 தொற்றைத் தடுப்பதற்கான வழி முறைகளை எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். 

H3N2 தொற்று : எச்3என்2 வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக மாறியுள்ளது. இந்த வைரஸ் ஒவ்வொரு ஆண்டும் மாற்றமடைந்து பரவுகிறது. H3N2 வைரஸ் என்பது இன்ஃப்ளூயன்ஸா எ வைரஸ் வகையைச் சேர்ந்த  ஒன்றாகும். இந்த வைரஸ் தொற்று பொதுவாக பறவைகள் மற்றும் மனிதர்களை பெருமளவில் பாதிக்கிறது. டெல்லி எய்ம்ஸ்-ன் முன்னாள் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா, எச்3என்2 வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்துப் பேசினார்.

வைரஸின் அறிகுறிகள் மற்றும் பரவல் : அதில் H3N2 வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள், காய்ச்சல், தொண்டை புண், இருமல், உடல்வலி மற்றும் மூக்கில் சளி போன்றவைகள் என்று டாக்டர் ரன்தீப் குலேரியா கூறினார். இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மக்களுக்கு அதிகம் பரவுவதாகவும், வானிலை மாறும்போது காய்ச்சல் வருவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது மற்றும் கோவிட்க்குப் பிறகு மக்கள் நெரிசலான இடங்களில் முகமூடிகளை அணியாமல் இருப்பதாலும் பரவுகிறது என்று கூறினார். முன்னதாக எச்1என்1 என்ற வைரஸ் தோற்று இருந்தது, அதன் மாறுபாடே தற்பொழுது எச்3என்2 ஆக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

தடுப்பு நடவடிக்கைகள் : கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுள் மூலம் இந்த தொற்றை தடுக்கலாம். அதாவது, நெரிசலான இடங்களில் முககவசங்களை அணிவதன் மூலம் எச்3என்2 வைரஸ் தொற்றை தடுக்கலாம் என்று டாக்டர் ரன்தீப் குலேரியா கூறினார். நாம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளியை பின்பற்றவேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்