பள்ளி மாணவர்கள் 206 பேருக்கு மர்ம காய்ச்சல்… இவர்களில் பலருக்கு பன்றிக்காய்ச்சல் என ஆய்வில் தகவல்.. பரவும் பன்றிகாய்ச்சலால் பீதி..
- மருத்துவ முகாமில் ஒரு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட 6 மாணவர்கள் H1N1 எனப்படும் இன்ஃபுளூயன்சா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- பரவும் பன்றிக்காய்ச்சலால் பள்ளி மாணவர்கள் அவதி..
கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கேரள சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்ட அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள விஎம்ஹெச்எம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 206 மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல் தாக்கியதாக முதலில் புகார் வந்துள்ளது.
இதன் அடிப்படையில் அந்த பள்ளியில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் காய்ச்சல் இருப்போரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த ரத்தப் பரிசோதனையில் அப்பள்ளியைச் சேர்ந்த 7 பேருக்கு H1N1 எனப்படும் இன்ஃபுளூயன்சா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அந்த பள்ளி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் தகுந்த நடவடிக்கைகளையும் மேலும் நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் காய்ச்சல் பரவி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.