எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு இனி அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.
இந்தியர்களுக்கு பணிக்காக வழங்கப்படும் H1B விசாவை இனி அமெரிக்காவிலேயே புதுப்பித்து கொள்ளலாம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இடையேயான சந்திப்புக்கு பிறகு இதனை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இதுதொடர்பாக வாஷிங்டன் டிசியில் உள்ள ரொனால்ட் ரீகன் கட்டிடத்தில் இந்திய புலம்பெயர்ந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் வசதிக்காக H1B விசாவை இங்கவே புதுப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையிலான நட்புறவை ஜோ பைடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செயல் முயல்கிறார் என தெரிவித்தார்.
மேலும், பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் அமெரிக்காவின் புதிய தூதரகங்கள் திறக்கப்படும் . இந்தியா இந்த ஆண்டு சியாட்டிலில் புதிய தூதரகத்தை திறக்க உள்ளது. இது தவிர, அமெரிக்காவின் மேலும் 2 நகரங்களில் இந்திய துணை தூதரகங்கள் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு டி-சர்ட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிசளித்தார். செயற்கை நுண்ணறிவு குறித்த பிரதமர் மோடியின் மேற்கோள் அச்சிடப்பட்ட டி-சர்ட்டை பைடன் பரிசாக அளித்தார். மேலும், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் முக்கியமான வளர்ச்சியை மோடி பாராட்டியிருந்தார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…