அமெரிக்காவில் இந்தியர்களுக்கு தொடரும் சிக்கல்! எச்.1.பி விசா கட்டுபாட்டால் மென்பொறியாளர்கள் பணிநீக்கம் அதிகரிப்பு….
அமெரிக்க குடியுரிமைக்காக காத்திருக்கும் இந்திய மென்பொறியாளர்கள் நிலை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எச்.1.பி விசாக் காலத்தை நீட்டிக்க பிடி இறுகி இருப்பதால், அங்கு பணிபுரியும் இந்திய மென்பொறியாளர்கள் தரம் பிரிக்கப்பட்டு மீண்டும் சொந்த நாட்டுக்கே திரும்ப அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
அவர்கள் இந்தியா திரும்பினால், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக இங்கு அதே நிறுவனத்தில் பணிபுரிவோர் பலரை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்ய தொடங்கி உள்ளன. இதுமட்டும் அல்லாமல் கிரீன் கார்டு எனப்படும் அமெரிக்க குடியுரிமை பெற விண்ணப்பித்துள்ள இந்தியர்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அமெரிக்க வாழ் இந்திய மென்பொறியாளர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
source: dinasuvadu.com