உத்தரகாண்ட் முதல்வர் இறந்துவிட்டதாக வதந்தி.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திர சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் அம்மாநிலத்தின் 8ஆம் முதல்வர் ஆவர். இந்நிலையில், திரிவேந்திர சிங் இறந்துவிட்டதாக சமூகவலைதளகளில் வதந்திகள் பரவியது.
இதனையடுத்து, டேராடூன் மாவட்ட டி.ஜி.பி. அசோக் குமார் உத்தரவின்பேரில், டேராடூன் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு வழக்குபதிவு செய்துள்ளார். வதந்தி பரப்பியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. எச்சரிக்கை விடுத்தார்.