கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா.! பக்தர்களுக்கு அனுமதி மறுக்கும் கோவில் நிர்வாகம்.!

கொரோனா பரவல் காரணாமாக குருவாயூர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் நன்கு செயல்பட்டு வந்த கேரளாவிலும் தற்போது கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால், அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
கடந்த ஜூன் 2 முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கின் முக்கிய தளர்வாக கேரளாவில் வழிபாட்டு தளங்கள் திறக்கப்பட்டன. அதேபோல திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவிலும் திறக்கப்பட்டது. தற்போது கதிருச்சூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக குருவாயூர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக குருவாயூர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கு முன் நாள் ஒன்றுக்கு 600 பக்தர்கள் (ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டும்) மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஒரு மணிநேரத்திற்கு 150 பேர் வீதம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.