குரு நானக் ஜெயந்தி…..வானவேடிக்கையில் ஜொலித்த பொற்கோவில்…!!
குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப்பின் புகழ்பெற்ற சீக்கிய பொற்கோயிலில் வானவேடிக்கை நடத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.
சீக்கிய மதத்தை நிருவிய குரு நானக் தேவ் ஆவார்.இவரின் அவதார திருவிழா, ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளான்று சீக்கியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா சீக்கிய மத திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.இந்த விழாவினை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போர் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்திருந்தது.
இந்நிலையில் குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பொற்கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன. திருவிழாவை மேலும் உற்சாகப்படுத்த அங்கு வண்ணமயமான வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த வானவேடிக்கைகளை மக்கள் கண்டு ரசித்தனர்.
DINASUVADU