கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதால் 33 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அந்நிறுவனத்திற்கு பணம் தராததால், ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து தனது சொந்த செலவில் சிலிண்டர்கள் வாங்கி பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றியவர் டாக்டர் கபில் கான். அரசுக்கு எதிராக பேசியதால் கைது செய்யப்பட்ட கபில் கான் கடந்த ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது சகோதரர் காசீப் கான், நேற்று பணி முடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, மர்மநபர்கள் அவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் இருந்து குண்டுகள் அகற்றப்பட்டாலும், அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. இந்நிலையில் அவரது உடல் தற்போது முன்னேற்றமடைந்து வருகிறது.
இது குறித்து டாக்டர் கபில் கான் கூறியதாவது, எனது சகோதரர் உடல் தற்போது முன்னேற்றமடைந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யாமல் எனது தம்பியின் உடல்நிலை முன்னேற்றம் அடையும் வரும் வரை காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஏனெனில் அவர் கூறினால் தான் என்ன நடந்தது என்பது குறித்து தெரியவரும். ஆகையால் தான் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் தனது தம்பியின் உடல்நலத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். காசீப் கான், முதல்வர் இல்லத்தில் இருந்து வெறும் 500 மீட்டர் தூரத்தில் நேற்றிரவு சுடப்பட்டார் என்று கூறியுள்ளார்.
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…
சென்னை : எங்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.…
குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில்…
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன்…