காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாகரிகமான பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றி!
குஜராத் தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாகரிகமான பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் கட்சியின் குஜராத் தேர்தல் பொறுப்பாளருமான அசோக் கெலாட் தெரி வித்துள் ளார்.
குஜராத் தேர்தல் முடிவு குறித்து அசோக் கெலாட் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் ராகுல் குஜராத்தில் நாகரிமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார். பஸ் பயணங்கள் மூலம் மக்களோடு நெருக்கமாக இருந்தார். காங்கிரசும் அவரது வழியில் பிரச்சாரம் செய்தது. தேர்தல் முடிவுகளை ராகுல் காந்தியின் நாகரிகமான பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் நாடு இந்த முடிவுகளை காங்கிரஸுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கும். ‘மண்ணின் மைந்தர்’ என்ற பிரச்சினையை எழுப்பி பிரச்சாரத்தை பாஜக திசை திருப்ப முயற்சித்தது. பிரதமர் மோடி குஜராத்தை சேர்ந்தவர் என்று பாஜக கூறியது. மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது மோடி கடும் விமர்சனங்களைக் கூறினார். அதுபோன்று பேசுவது காங்கிரஸின் கலாச்சாரம் அல்ல. ‘பிரதமருக்கு எதிராக காங்கிரஸார் இதுபோன்ற விமர்சனங்களைச் செய்யமாட்டார்கள்’ என்று ராகுல் காந்தி கூறினார்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையிலும் எங்கள் தேர்தல் பிரச்சாரத்திலும் குஜராத் மக்களின் உணர்வுகளை நாங்கள் வெற்றிகரமாக பிரதிபலித்துள்ளோம். அதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.
source: dinasuvadu.com