பழங்களில் விநாயகர் சிலையை உருவாக்கிய பெண் மருத்துவர்
குஜராத்தில் உள்ள சூரத் பெண் மருத்துவர் உலர் பழங்களில் உருவாக்கிய விநாயகர் சிலை அனைவரையும் கவர்ந்துள்ளது.
விநாயக சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரவர் வீடுகளில் கொண்டாடலாம் என்றும், அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பிள்ளையார்களை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தில் உள்ள சூரத்தில் பெண் மருத்துவர் ஒருவர் உலர் பழங்களில் பிள்ளையாரை செய்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அதிதி மிட்டல் என்ற பெண் மருத்துவர் நிலக்கடலை, பாதாம் பருப்பு, முந்திரி, ஃபைன் விதைகள் உள்ளிட்ட உலர் பழங்கள் மற்றும் தானியங்களை பயன்படுத்தி அழகிய விநாயகர் சிலையை உருவாகியுள்ளார் . 20 அங்குலம் உயரமுடைய இந்த சிலையை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலுள்ள பழங்கள் மருத்துவமனையில் வருபவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. உலர் பழங்களில் உருவாகியுள்ள இந்த பிள்ளையார் சிலையை அனைவரும் கவர்ந்துள்ளது.