குஜராத் நரோடா பாட்டியா கலவர குற்றவாளி மகளுக்கு சீட் வழங்கியது பாஜக!
குஜராத்தில் நரோடா பாட்டியா கலவரத்தில் குற்றவாளியான மனோஜ் பயல் குக்ரனியின் மகள் பாயல் குல்கர்னிக்கு சீட் வழங்கிய பாஜக.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. அதில், தேர்தலில் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது. முன்னதாக 160 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்ட நிலையில் இரண்டாவது பட்டியலும் வெளியானது.பாஜக இதுவரை 166 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், குஜராத்தில் மாநிலத்தில் 2002ல் நடந்த நரோடா பாட்டியா (கோத்ரா) கலவர வழக்கில் தண்டிக்கப்பட்ட மனோஜ் குக்ரானியின் மகள் பாயல் குக்ரானிக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கியுள்ளது பாஜக. 2002-ல் நடந்த நரோடா பாட்டியா கலவர வழக்கில் 16 பேருடன் சேர்த்து பாயலின் தந்தை மனோஜ் குக்ரானி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த கலவர வழக்கில் மனோஜ் குக்ரானிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 2018-ல் குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. மனோஜ் குக்ரானி தற்போது ஜாமீனில் இருக்கும் நிலையில், அவரது மகள் பாயல் குக்ரானிக்கு (வயது 30) குஜராத் தேர்தலில் நரோடா தொகுதியில் போட்டியிட பாஜக சீட் வழங்கியுள்ளது.
மயக்க மருந்து நிபுணரான பயல் குக்ரானி பாஜகவின் இளம் பெண் வேட்பாளர் ஆவார். இதுகுறித்து பாயல் கூறுகையில், கட்சி என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு சீட் வழங்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது, முதல் கட்டமாக டிசம்பர் 1ம் தேதியும், 2வது கட்டம் டிசம்பர் 5ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.