குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக 451 சீட்களை கைப்பற்றி அமோக வெற்றி.!
குஜராத்தில் உள்ள 6 நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் 4 நகராட்சிகளை பாஜக கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி 6 மாநகராட்சிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாக்குப் பதிவு நடைபெற்றது. அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் வாக்கு பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் மற்றும் இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிட்டன.
மொத்தம் 2,276 வேட்பாளர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர். இது தவிர ஜூனாகத் மாநகராட்சியில் நடக்கும் 2 இடங்களுக்காக நடக்கும் இடைத்தேர்தலில் 9 பேர் போட்டியிட்டனர். இதில் சராசரியாக 43% வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்நிலையில், குஜராத்தில் உள்ள 6 நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலின் வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
இதில் மொத்தமுள்ள 575 சீட்களில் பாஜக 451 சீட்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி, அகமதாபாத், சூரத், ஜாம்நகர், ராஜ்கோட் என 4 நகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதில் சூரத்தில் 93 இடங்கள், ராஜ்கோட்டில் 68 இடங்கள், ஜாம்நகரில் 50 இடங்கள், பாவ்நகரில் 44 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி 19 இடங்களை வென்றுள்ளது.
Thank you Gujarat!
Results of municipal elections across the state clearly show the unwavering faith people have towards politics of development and good governance.
Grateful to the people of the state for trusting BJP yet again.
Always an honour to serve Gujarat.
— Narendra Modi (@narendramodi) February 23, 2021