குஜராத்தில் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
வருமானவரி புலனாய்வு இயக்குனரகம் குஜராத்தின் கட்ச் நகரின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்பிலான ஹெராயின் கொண்ட கொள்கலன்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இவை ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக சரக்குகளை நிறுத்திய அதிகாரிகள், சோதனையின் போதுடால்கம் பவுடர் என்ற போர்வையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இவை ஆந்திராவின் விஜயவாடாவில் அமைந்துள்ள ஆஷி டிரேடிங் நிறுவனத்தால் ஆப்கானிஸ்தானில் இருந்து முந்த்ரா துறைமுகத்திற்கு இந்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் அமைந்துள்ள ஹாசன் ஹுசைன் லிமிடெட் நிறுவனம் இதன் ஏற்றுமதி நிறுவனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக டிஆர்ஐ சுங்கச்சாவடியின் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…