குஜராத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.9,000 கோடி மதிப்புள்ள ஹெராயின்..!

Default Image

குஜராத்தில் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 

வருமானவரி புலனாய்வு இயக்குனரகம் குஜராத்தின் கட்ச் நகரின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்பிலான ஹெராயின் கொண்ட கொள்கலன்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இவை ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்காக சரக்குகளை நிறுத்திய அதிகாரிகள், சோதனையின் போது​டால்கம் பவுடர் என்ற போர்வையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், இவை ஆந்திராவின் விஜயவாடாவில் அமைந்துள்ள ஆஷி டிரேடிங் நிறுவனத்தால் ஆப்கானிஸ்தானில் இருந்து முந்த்ரா துறைமுகத்திற்கு இந்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் அமைந்துள்ள ஹாசன் ஹுசைன் லிமிடெட் நிறுவனம் இதன் ஏற்றுமதி நிறுவனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக டிஆர்ஐ சுங்கச்சாவடியின் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்