செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் கொரோனா மத்தியில் செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடியாது என குஜராத் கல்வி துறை அமைச்சர் பூபேந்திர சிங் சூடாசாமா நேற்று தெரிவித்தார்.
காந்திநகரில் முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்ததாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
செப்டம்பர் 21 முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான இறுதி முடிவை அந்தந்த மாநிலங்களால் எடுக்கப்படும் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், SOP களின் படி, மாணவர்கள் தங்கள் பெற்றோரின் அனுமதியுடன் செப்டம்பர் 21 முதல் ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற பள்ளிகளுக்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாணவர்கள் ஒரே இடத்தில் கூடினால் கொரோனா பரவும் அச்சம் அதிகமாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவது நல்லதல்லை என்று அமைச்சர் கூறினார். எனவே, செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டாம் என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் தகுந்த முடிவு எடுக்கப்படும். இதற்கிடையில், மாநிலத்தில் ஆன்லைன் வகுப்பு தொடரும் என்றும் அவர் கூறினார்.
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…