குஜராத் அரசு அறிவிப்பு: மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மின்சார வாகனங்கள் வாங்குபருக்கு குஜராத் அரசு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
குஜராத்தில் பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனம் மற்றும் கார் ஆகிய வாகனங்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 1.50 லட்சம் வரை வழங்குவதாக அறிவித்துள்ளது. குஜராத் அரசு 870 கோடி ரூபாயை வரும் 4 ஆண்டுகளில் 2 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ஒதுக்கியுள்ளது.
மேலும், இருசக்கர வாகனங்களுக்கு 20,000 ரூபாய் வரையும், கார் போன்ற வாகனங்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையும் ஊக்கத்தொகையாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கு 10 லட்சம் ரூபாய் மானியத்தொகையாக வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.