குஜராத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் பாஜகவில் இருந்து ராஜினாமா.
பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் டிச.1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் முதல் கட்டத்தில் 89 தொகுதிகளும், இரண்டாம் கட்டத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே தற்போது குஜராத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களை கைப்பற்றி இருந்தது. காங்கிரஸ் 77 இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக உள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் பாஜக, காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியில் ஆம் ஆத்மியும் இணைந்துள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த நிலையில், குஜராத்தில் 32 ஆண்டுகள் பாஜகவில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பதவி விலகல் கடிதத்தை மாநில பாஜக தலைவருக்கு அனுப்பியுள்ளதாக செய்தியாளர்களிடம் ஜெய் நாராயண் வியாஸ் கூறியுள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் சுகாதார அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ், காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சியில் சேருவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்தாகவும், ஆதரவாளர்களை கலந்தலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். மேலும், நான் பாஜகவால் சலிப்படைந்துவிட்டேன், வரவிருக்கும் குஜராத் தேர்தலில் சித்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட முடிவு செய்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…