15 லட்சம் புலம்பெயர்ந்தோரை ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் ஏற்றிச்செல்ல..குஜராத் ரூ.102 கோடி ரயில்வேக்கு வழங்கியது.!

Default Image

கொரோனா ஊரடங்கு போது 1,027 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றதற்காக குஜராத் அரசு ரூ.102 கோடி ரயில்வேக்கு வழங்கியுள்ளது.

சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக ரயில்வே 2,142 கோடி ரூபாயை ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க செலவழித்துள்ளது. ஆனால் வெறும் 429 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 844 ரயில்களில் 12 லட்சம் தொழிலாளர்களைக் கொண்டு செல்வதற்காக ரயில்வேக்கு ரூ .85 கோடி செலுத்தியது. 271 ரயில்களில் நான்கு லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழகம் ரூ .34 கோடி செலுத்தியது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மூல மாநிலங்களாக கருதப்படும் மாநிலங்கள், உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்றவை ரூ .21 கோடி, ரூ .8 கோடி, ரூ .64 லட்சம் ஆகியவற்றை புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்செல்ல செலுத்தியுள்ளன.

செயல்பாட்டு செலவில் 15% மட்டுமே ரயில்வே மீட்டது:

தகவல் அறியும் விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட தேதியின்படி, ஜூன் 29 ஆம் தேதி வரை ரயில்வே ரூ .428 கோடியை ஈட்டியது. தேசிய போக்குவரத்து 4,615 ஷ்ராமிக் ரயில்களை இயக்கியபோது. இது ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் ஒரு பயணிக்கு ரூ .3,400 செலவிட்டதைக் காட்டுகிறது. இது மொத்தம் 63 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ .2,142 கோடி ஆகும்.

தேசிய போக்குவரத்து போக்குவரத்து நடவடிக்கைகளில் 15 சதவீதத்தை மட்டுமே மாநிலங்களிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது. மீதமுள்ள 85 சதவீதத்தை அமைச்சகம் ஏற்கிறது என்று ரயில்வே  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் ஒரு நபரின் சராசரி கட்டணம் ரூ .600 ஆகும். இருந்தாலும் நாங்கள் ஒரு பயணிக்கு ரூ .3,400 செலவிட்டோம் மொத்தம் ரூ .2,142 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே -1 முதல் 63 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதன் மூலம் நாங்கள் 429 கோடி ரூபாய் வருவாய் ஈட்டினோம் என்று அந்த அதிகாரி கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்