குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனத்துக்கு “சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருது” – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

Default Image

பேரிடர் மேலாண்மையில் சிறப்பான,தன்னலமற்ற சேவை ஆற்றியதற்காக குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனம்,”சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருதுக்கு” தேர்வாகி இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவரான சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு,குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனத்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.பேரிடர் மேலாண்மையில் சிறப்பான,தன்னலமற்ற சேவை ஆற்றியதற்காக குஜராத் பேரிடர் மேலாண்மை நிறுவனமானது “சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருதுக்கு” தேர்வாகி இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும்,தனிநபர் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் வினோத் ஷர்மா என்பவருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,இவ்விருதுடன்,ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்