தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

Published by
மணிகண்டன்

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.

குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவான ATS பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 4 பெரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் புகைப்படத்தையும் ATS பிரிவு காவல்துறையினர் வெளியிட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர் குஜராத் காவல் டிஜிபி விகாஷ் ஷாகாய் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை கூறினார்.

அவர் கூறுகையில், கைதானவர்கள் பெயர் முகமது நுஸ்ரத், முகமது நுஃப்ரான், முகமது பாரிஸ், முகமது ரஸ்தீன் என தகவல் கிடைத்தது. இந்த 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள். இவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் (ஐஎஸ்ஐஎஸ்) உறுப்பினர்கள். இவர்கள் நால்வரும் இந்தியாவுக்குள் வந்து பயங்கரவாத தாக்குதல் நடத்த  திட்டமிட்டு இருந்தார்கள்.

இவர்கள் பற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இவர்களை பிடிக்க திட்டமிடப்பட்டது. தெற்கிலிருந்து வரும் ரயில்கள் மற்றும் விமானங்களின் பயணிகள் பட்டியல்கள் ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் 4 பேரும் ஒரே PNR எண் மூலம் சென்னையில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்று இண்டிகோ விமானம் மூலம் வருவது பற்றி தகவல் கிடைக்கப்பெற்றது. மேலும், இலங்கையிலும் இதுபற்றி விசாரணை செய்யப்பட்டது.

பிப்ரவரி 2024 முதல், இந்த 4 பேரும் பாகிஸ்தானில் வசிக்கும் ஐஎஸ்ஐஎஸ் தலைவரான அபு என்ற நபருடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த அபு, இவர்களுக்கு கூறியுள்ளான். தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஒப்புக்கொள்ளும் அளவுக்கு தீவிரவாதிகளாக இவர்கள் மாறி இருந்தார்கள். பாகிஸ்தானை சேர்ந்த அபுவும் இவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவர்களிடமிருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.  அதில் அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் உடன் தீவிர அங்கத்துவத்தை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன.

அகமதாபாத் அருகே உள்ள நானா சிலோடா பகுதியின் புகைப்படம் மொபைல் போன்களில் இருந்தது. அதில் பயங்கரவாத தாக்குதலை நடத்த வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடம் இருந்தது. குறிப்பிட்ட இடத்தில் இருந்து பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் 20 சுறுசுறுப்பான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. என பல்வேறு தகவல்களை குஜராத் டிஜிபி விகாஷ் ஷாகாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆரம்பமே அமர்க்களம்… இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கிய இந்திய அணி! 133 ரன்கள் டார்கெட்…

கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…

9 hours ago

மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.! அமித்ஷா இரங்கல்…

ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…

10 hours ago

“நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…

11 hours ago

தனுஷ் – நயன்தாரா வழக்கு: உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு.!

சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…

11 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி… டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…

12 hours ago

மகாராஷ்டிரா: ரயில் விபத்தில் 6 பேர் பலி? தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதிய பரிதாபம்.!

ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில்  நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…

12 hours ago