முதல் முறையாக வழக்கு விசாரணையை நேரலை குஜராத் நீதிமன்றம்.!
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நீதிமன்றங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால், நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையை காணொளி வாயிலாக நடத்தி வருகின்றனர். மாணவர்களும் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகின்றன.
கொரோனா பாதிப்பு குறைந்த போதிலும் பல மாநிலங்களில் காணொளி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குஜராத்தில் முதல்முறையாக உயர்நீதிமன்ற வழக்கின் விசாரணை யூ டியூபில் நேரலை செய்யப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக வழக்கு நேரலை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.